தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுமை என்று பெயரிடப்பட்டுள்ள பேட்டரி ரயில்!

சென்னை : அரக்கோணம் ரயில்வே மின்சார லோகோ பணிமனையில், மின்சாரம், பேட்டரியில் இயங்கும் ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடாமல் இயங்கும் இந்த இன்ஜினுக்கு, 'பசுமை' என, பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பசுமை என்று பெயரிடப்பட்டுள்ள பேட்டரி ரயில்!
பசுமை என்று பெயரிடப்பட்டுள்ள பேட்டரி ரயில்!

By

Published : Oct 7, 2020, 12:45 PM IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில்வே மின்சார லோகோ பணிமனையில், மின்சாரம், பேட்டரியில் இயங்கும் ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூல் மாசுபடாமல் இயங்கும் இன்ஜினுக்கு பசுமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்ஜின், பேட்டரியில் மூன்றரை மணியிலிருந்து நான்கு மணி நேரம்வரை இயங்கும். இதில், 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்க முடியும். மேலும், மணிக்கு, 15 கி.மீ., வேகத்தில் இயங்கும் இந்த ரயில், ஆயிரத்து 80 டன் வரை இழுத்து செல்லும் திறன்கொண்டாது.

மின்சார ரயில் பாதைகளில் விபத்து காலங்களில், இந்த இன்ஜின் பயன்படுத்தி, ரயில்கள் இயக்க உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேசின் பிரிட்ஜ் -சென்ட்ரல் நிலையம் இடையே வெள்ளோட்டம் விடப்பட்டது. சுற்றுசூழல் மாசுபடாமல் இருக்கும் வண்ணம் இன்ஜினை தயாரித்த, அரக்கோணம் மின்சார லோகோ பணிமனை பணியாளர்களை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details