தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வது பற்றி பொய்யான தகவல்’ - அந்தோணிசாமி கண்டனம்

சென்னை: மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதில் இரு கிருத்துவ பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் வன்முறை ஏற்பட்டது போன்ற முற்றிலும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருவது வருத்தம் அளிப்பதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.

அந்தோனி
அந்தோனி

By

Published : Apr 22, 2020, 11:32 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “மருத்துவர் சைமன் மறைவு மிகவும் வருந்தத்தக்கது. அதோடு அவர் உடலை அடக்கம் செய்யும் போது ஏற்பட்ட சில நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கவை.

சைமன் உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கத்தில் உள்ள விண்ணேற்ற ஆண்டவர் ஆலயம் அனுமதி வழங்கியது. ஆனால் தொற்றால் அவர் உயிரிழந்ததால் மாநகராட்சி உடலை கிழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தது. அங்கே எதிர்ப்பு வந்ததால் மாநகராட்சி, ஆவடியில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டது.

அதன் பிறகு நடந்த வன்முறை மற்றும் விரும்பத்தகாத செயல்கள் முற்றிலும் அங்கு நடைப்பெற்றதே தவிர கீழ்ப்பாக்கத்தில் நடைப்பெற்றவை அல்ல. சமூகவலைதளங்களில் மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதில் இரு கிருத்துவ பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் வன்முறை ஏற்பட்டது என தொடர்ந்து பொய்யான தகவல்கள் பரப்பி வருவது கண்டனத்துக்கு உரியது. மேலும் சைமன் மனைவி முன்வைத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details