சென்னை :கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசால் அனுமதி பெற்ற நாடுகளுக்கு மட்டும் விமான சேவை செயல்பட்டுவருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் கட்டாயம் கரோனா பரிசோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளன.
அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் எடுத்த ஆர்டிபிசிஆர் சோதனைகள் சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்கு வரும் விமானங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்.8) சவுதி அரேபியா மற்றும் துபாயிலிருந்து இரண்டு விமானங்கள் சென்னை விமான நிலையம் வந்துள்ளது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை கவுன்ட்டர்களில் உள்ள அலுவலர்களிடம் சோதனை செய்ய வரிசையில் நின்றுள்ளனர்.
அப்போது இரண்டு விமானங்களில் வந்த பயணிகளும் ஒரே நேரத்தில் குடியுரிமை பரிசோதனை கவுன்ட்டர்களுக்கு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுன்ட்டர்கள் மூன்று மட்டுமே செயல்பட்டுள்ளன.
மீதமிருந்த கவுன்ட்டர்களில் அலுவலர்கள் யாரும் இல்லை. இதனால் வெகு நேரமாக பயணிகள் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டு விமான நிலையத்தில் கூட்டமாக இருந்ததால் விமான நிலையத்தில் முறையாக கரோனா முன்னெச்சரிக்கையாக எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.
கூடுதலாக குடியுரிமை சோதனை கவுன்ட்டர்கள் அமைக்க வேண்டும் என விமான நிலைய அலுவலர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விமான நிலைய அலுவலர்கள் மேலும் இரண்டு குடியுரிமை சோதனை கவுன்ட்டர்கள் திறந்துள்ளனர்.
இதுகுறித்து விள்ளக்கமளித்த விமான நிலைய அலுவலர்கள், கரோனா தொற்று பரவல் காரணமாக குடியுரிமை சோதனை கவுன்ட்டர்கள் அதிகப்படியாக அமைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : செப். 12 தடுப்பூசி முகாமை தள்ளிவைக்க மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை