தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு - செல்போன் பறிப்பின்போது நேர்ந்த சோகம்!

சென்னையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸில் சென்று கொண்டிருந்த மேற்குவங்க பயணி ஒருவர், ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். பயணியிடம் மர்மநபர் ஒருவர் செல்போனை பறிக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

Passenger
Passenger

By

Published : Jan 22, 2023, 8:28 PM IST

சென்னை: மேற்குவங்க மாநிலத்திலிருந்து நேற்று(ஜன.21) மாலை சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயிலில் S4 பெட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோனி(24), அவரது உறவினர் அசரப் ஷெக்(24) இருவரும் பயணம் செய்துள்ளனர். இருவரும் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது.

ரயில் சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, ரோனி செல்போனில் படம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கொள்ளையன் ஒருவன் ரோனியின் செல்போனை பறிக்க முயன்றான். அப்போது செல்போன் கீழே விழுந்தது. ரோனி செல்போனை பிடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரயில் படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், மருத்துவக் குழுவை வரவழைத்து பரிசோதித்து பார்த்தபோது, ரோனி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்போன் திருட முயன்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓட்டுநர் இல்லாமல் ஓடிய அரசு பேருந்து சுவற்றில் மோதி விபத்து!

ABOUT THE AUTHOR

...view details