தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகள் விவரம் - விமானப் போக்குவரத்துத் துறை

சென்னை: விமான நிலையத்தில் தற்போது வரை பயணித்த பயணிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Chennai Airport
Chennai Airport

By

Published : May 25, 2020, 4:19 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் விமான சேவைகள் 61 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், மத்திய அரசு உள்நாட்டு விமானங்களை நிபந்தனைகளுடன் இயக்க அனுமதியளித்தது. அதைத்தொடர்ந்து இன்று(மே 25) முதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு முதல் விமானம் 116 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. அதேபோல் சென்னையிலிருந்து பெங்களூரு, கோயம்புத்தூர், கொச்சி, வாரணாசி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு 19 விமானங்கள் செல்கிறது. சென்னை வர அனுமதிக்கப்பட்ட 25 விமானங்களில் 16 விமானங்கள் மட்டும் வருகின்றன.

அந்த விமானங்களில் வரும் பயணிகளுக்கு 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முத்திரை குத்தப்படும் என விமான அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலையிலிருந்து தற்போதுவரை சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, பெங்களூரு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட ஐந்து நகரங்களுக்கு 179 பேர் சென்றுள்ளனர். அதேபோல் டெல்லி, மதுரை, கோயம்புத்தூர், பெங்களூரு, கவுகாத்தி, வாரணாசி உள்ளிட்ட நகர்களிலிருந்து சென்னைக்கு 894 பேர் வந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் விமான சேவை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details