சென்னை: சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.28) 2022-23ஆம் ஆண்டிற்கான கைத்தறி, துணிநூல் துறை மற்றும் வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் காந்தி, மூர்த்தி ஆகியோர் பதிலளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதனிடையே, சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி இதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார்.
அதில், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் மக்கள் தொகையின் 48.45 விழுக்காடு மக்கள் நகர்ப்புற பகுதிகளில் வசிப்பதாகவும், நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்றும், வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதியினை கருத்தில் கொண்டு, வளர்ச்சி திட்டங்களைத் தயாரித்தல், மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செயற்படுத்துதலும் தேவையானதாகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்களுக்கு சட்டப்பூர்வமான தகுதி நிலையினை வழங்குதல் தேவையானதாக உள்ளதாகவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.