தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியை 4000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற பரிதி இளம் சுருதி - முன்னாள் ஐபிஎஸ் சிவகாமியை 4000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற பரிதி இளம் சுருதி..

சென்னை மாநகராட்சி 99ஆவது வார்டில் முன்னாள் திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி தனக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியைவிட 4000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் சிவகாமியை 4000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற பரிதி இளம் சுருதி.
முன்னாள் ஐபிஎஸ் சிவகாமியை 4000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற பரிதி இளம் சுருதி.

By

Published : Feb 22, 2022, 3:22 PM IST

Updated : Feb 22, 2022, 4:12 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பெரும்பாலானவை வெளிவந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் 99ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பரிதி இளம் சுருதி 4000 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியைத் தோற்கடித்துள்ளார்.

யார் இந்த பரிதி இளம் வழுதி?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அபிமன்யு, இந்திரஜித் எனப் புகழப்பெற்றவர் பரிதி இளம்வழுதி. மேலும் சென்னை எழும்பூர் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வென்று 1989-2011 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

மேலும் மேடைகளில் பேசும்போது கொள்கை ரீதியாக யாரையும் விமர்சனம் செய்யாதவர். 2013ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓபிஎஸ் அணியில் பரிதி இளம்வழுதி தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்தார். 2018ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமானார்.

எதிர்பார்க்கப்பட்ட பரிதி இளம்சுருதி

பரிதி இளம் சுருதியின் தந்தை மட்டும் அல்லாது அவரது தாத்தாவும் மேலவை உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். இந்நிலையில் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த தான் வேட்பாளர் இளம் சுருதி.

திமுக சார்பில் போட்டியிட்ட இளம்சுருதி சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;திமுக மாபெரும் வெற்றி: ஸ்டாலினை சந்தித்து மூத்த நிர்வாகிகள் வாழ்த்து..

Last Updated : Feb 22, 2022, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details