தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CCTV:கோயம்பேடு மார்க்கெட்டில் பழப்பெட்டிகள் திருடிய நபர்கள்! - CCTV Party of Mysterious Thieves

சென்னை கோயம்பேட்டில் உள்ள பழ மார்க்கெட்டில் பழப்பெட்டிகளை திருடிய நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பழப்பட்டிகள் திருடிய மர்ம நபர்களின் சிசிடிவி கட்சி வெளியீடு
கோயம்பேடு மார்க்கெட்டில் பழப்பட்டிகள் திருடிய மர்ம நபர்களின் சிசிடிவி கட்சி வெளியீடு

By

Published : Sep 14, 2022, 4:21 PM IST

சென்னை:கோயம்பேடு பழைய மார்க்கெட்டில் எஸ். ஆர் ஃப்ரூட் என்ற மொத்த கொள்முதல் பழக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு விற்பனைக்காக கடையில் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த ஆப்பிள், திராட்சை, மாதுளம் அடங்கிய பழப்பெட்டிகள் காணாமல் போய் உள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் பழ மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு நபர்கள் ஆளில்லாத நேரத்தில் மார்க்கெட்டில் புகுந்து பெட்டி பெட்டியாகப் பழங்களைத் திருடி செல்வது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து வியாபாரிகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன்(19), முத்துக்கருப்பன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CCTV:கோயம்பேடு மார்க்கெட்டில் பழப்பெட்டிகள் திருடிய நபர்கள்!

இதையும் படிங்க:உணவகத்திற்கு பெரியார் பெயர்... கடையை அடித்து நொறுக்கிய இந்து முன்னணி தொண்டர்கள்

ABOUT THE AUTHOR

...view details