தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..அதிர்ச்சியடைந்த இசைப்புயல்! - ஏஆர் ரகுமான் பங்கேற்ற இரவின் நிழல் நிகழ்ச்சி

இரவின் நிழல் திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழாவில் மைக் வேலை செய்யாததால் கோபமடைந்த பார்த்திபன், ஏ.ஆர் ரகுமான் மேடையில் இருக்க மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபத்தில் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ
கோபத்தில் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ

By

Published : May 2, 2022, 2:39 PM IST

பார்த்திபன் இயக்கி நடித்த படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா நேற்று (மே 1) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மானுடன் பார்த்திபன் உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது மைக் வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன், மைக்கை மேடைக்கு கீழே தூக்கி எறிந்தார். இதைக் கண்ட ஏ.ஆர் ரகுமான் சற்று அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகு மாற்று மைக் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து பார்த்திபன் தொடர்ந்து ஏ.ஆர் ரகுமானுடன் உரையாடினார் .

கோபத்தில் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ

இதையடுத்து, நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன் இந்த நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இந்நிலையில் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இரவின் நிழல் பைத்தியகாரத்தனமான யோசனை என நினைத்தேன் - ஏஆர்.ரகுமான்

ABOUT THE AUTHOR

...view details