தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்பி ட்விட்டர் பதிவுக்கு நடிகர் பார்த்திபன் பதிலடி... - R. Parthiepan

நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளதை குறித்து திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட்டு பார்சல் என பதிவிட்டிருந்தார்.

Parthiban serious of tweet
Parthiban serious of tweet

By

Published : Oct 23, 2020, 10:33 PM IST

Updated : Oct 23, 2020, 10:43 PM IST

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்... என பதிவிட்டிருந்தார். இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில் கூறியதாவது;

சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையான நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்.

உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!

இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம். நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது. sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம் திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.

செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்! தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால்,நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. அதலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த இரவின் நிழல்’ என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமாவளவனை திமுக., காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? நடிகை குஷ்பு கேள்வி

Last Updated : Oct 23, 2020, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details