சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இரவின் நிழல்' திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பயணத்தைக் கொண்டாடும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களில் இருந்து பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து பேசிய பார்த்திபன், “ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை நான் அழைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். நமது ஏ.ஆர்.ரஹ்மானின் இசையினை கொண்டாடும் விழாவிற்கு வருகை தர தமிழ்நாட்டில் நான்கு நண்பர்கள் கூட கிடைக்கவில்லை.