சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கலை ஓவியம் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றிற்கு சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தங்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைந்தால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று காலை அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சந்தித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் இணைந்து கோரிக்கை மாநாடு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.