சென்னை: திமுக அரசு பெறுப்பேற்ற பிறகு முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஆக.13) நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் (இ-பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தலின் போது திமுகவின் வாக்குறுதியை நம்பி ஆதரவளித்திருந்தோம். ஆனால் இன்று பகுதி நேர ஆசிரியர்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
திமுக தேர்தல் வாக்குறுதி
அரசு பள்ளிகளில் 10 ஆண்டுகளாக 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாதம் 8000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரியும் அவர்கள், பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்பட தொகுப்பு ஊதியம் பெறக்கூடிய அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக அறிவித்தது.
பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதுபோன்ற அறிவிப்பு வெளியாகாதது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிராமப்புறங்களில் வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு!