தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரத்தில் தொங்கியபடி ஸ்டாலினின் உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்: இவரின் கோரிக்கை இதுதான்! - Tamilnadu CM may permanent the part time teacher

பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மரத்தில் தலைகீழாகத் தொங்கி முதலமைச்சர் ஸ்டாலினின் உருவத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் செல்வம் சாதனை படைத்துள்ளார்.

மரத்தில் தொங்கியப் படி முதலமைச்சர் படத்தை வரைந்த பகுதி நேர ஒவிய ஆசிரியர்
மரத்தில் தொங்கியப் படி முதலமைச்சர் படத்தை வரைந்த பகுதி நேர ஒவிய ஆசிரியர்

By

Published : Jan 3, 2022, 6:14 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு வடிவங்களில் கோரிக்கைவிடுத்து-வருகின்றனர். உடலில் பெயிண்ட் ஊற்றிக் கொண்டு தரையில் படுத்து உருண்டு பகுதி நேர ஆசிரியர் செல்வம் ஏற்கனவே மு.க. ஸ்டாலின் உருவத்தைவரைந்தார்.

பணி நிரந்தரக் கோரிக்கை

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம், சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்துவருகிறார்.


இவர் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் அரசாணை வெளியிட வேண்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு மு.க. ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் படத்தையும் 30 நிமிடங்களில் வரைந்து அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி - தொடங்கிவைத்த ஸ்டாலின்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details