வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன். இவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தனது கணவர் குயில்தாசனின் உடல் நிலையைக் காரணம் காட்டி பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரி, தமிழ்நாடு சிறைக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து அவருக்கு ஒரு மாத காலம் பரோல் கிடைத்து கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியே வந்தார்.