இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சிறந்த கதை, சிறந்த இயக்குநர், சிறந்த நடிப்பு என பல்வேறு விருதுகளை குவித்த பரியேரும் பெருமாள் திரைப்படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் திரையிடப்படும் "பரியேறும் பெருமாள்" - இயக்குநர் மாரிசெல்வராஜ்
சென்னை: இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம் பிரான்ஸ் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் திரையிடப் படும் "பரியேறு ம் பெருமாள்
இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படம் திரையிடப்படவுள்ளது. புதிய படங்கள் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.