சென்னை: பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 2020-21ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி, அளித்த மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருப்பதாக பெற்றோர் கருதினர்.
குறைந்த மதிப்பெண்
இதனைத்தொடர்ந்து பள்ளியின் முதல்வர், நிர்வாக உதவிப்பொதுமேலாளர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியதோடு, பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதற்குப் பள்ளியின் ஆசிரியர்கள், சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி கடந்த ஆண்டில் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சியின் அடிப்படையில் தான் மதிப்பெண்கள் வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் வேறு பள்ளிகளில் படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும், புதிதாக இப்பள்ளியில் சேர்ந்தபின்னும் அவர்களுக்கு குறைவான மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.