சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையைச் (Washermanpet) சேர்ந்தவரின் 15 வயது மகன் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இவன் எந்நேரமும் ஆன்லைன் கேம் விளையாடி (Online game) வந்ததால், பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த அவன், கடந்த 17 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சந்தேகமடைந்து வீட்டில் சோதனை செய்தபோது பீரோவில் வைத்திருந்த 33 லட்சம் ரூபாய் பணம், 213 சவரன் நகைகளை அவன் எடுத்து சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து துணை ஆணையர் சிவபிரசாத்தின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் இருதயம் மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பராங்வின் டேனி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து மாணவனை தேடி வந்தனர்.