தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தப்பு பண்ணா அடிங்க சார்..' பிரம்பு வாங்கிக் கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்த பெற்றோர்! - மதுரை பள்ளி

மதுரையில் பெற்றோர் தங்கள் மகன் தவறுசெய்தால் அடித்துத் திருத்துங்கள் எனக் கூறி தலைமை ஆசிரியருக்கு பிரம்பு வாங்கிக்கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்துள்ளனர்.

பிரம்பு வாங்கிக் கொடுத்து மகனை சேர்த்த பெற்றோர்
பிரம்பு வாங்கிக் கொடுத்து மகனை சேர்த்த பெற்றோர்

By

Published : Jan 27, 2023, 3:37 PM IST

பிரம்பு வாங்கிக் கொடுத்து மகனை சேர்த்த பெற்றோர்

மதுரை: செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், சங்கரபாண்டியன். இவரது மனைவி தமிழரசி. இந்த பெற்றோர் தங்களது 4 வயது மகன் சக்தியை செல்லூர் பகுதியிலுள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி வகுப்பில் புதிதாக சேர்த்தனர். அப்போது பள்ளித் தலைமையாசிரியர் பால் ஜெயக்குமாருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வழங்கியதோடு, 'தங்கள் மகன் தவறு செய்தால் இந்தப் பிரம்பால் அடித்து தாங்கள் தண்டிக்கலாம்' என்ற உறுதிமொழி மனுவையும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சங்கரபாண்டியன், தமிழரசி ஆகியோர் கூறுகையில், "தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பு கொண்டு அடித்துத் திருத்த வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நல்ல மாணவர்களாக மனிதர்களாக சிறந்து விளங்குவார்கள். 'அடியாத மாடு படியாது' என்று ஒரு பழமொழி நம்மிடையே புழக்கத்தில் உண்டு.

பிரம்பு வாங்கிக் கொடுத்து மகனை சேர்த்த பெற்றோர்

அதனை மனதிற்கொண்டு தான், எங்கள் மகனை எல்கேஜி-யில் சேர்க்கும்போது தலைமையாசிரியருக்கு பிரம்பை பரிசளித்ததுடன், தவறு செய்தால் அவனைத் தண்டிக்க தயங்கக்கூடாது என்ற உறுதிமொழி மனுவையும் நாங்கள் வழங்கியுள்ளோம்” என்றனர். பிள்ளைகளை பள்ளியில் ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது, அன்பாகப் பேசி மட்டுமே திருத்த வேண்டும் என ஒரு சில பெற்றோர்கள் கூறி வரும் நிலையில், இந்தப் பெற்றோரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:Pariksha Pe Charcha: பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்த மதுரை மாணவி அஸ்வினி!

ABOUT THE AUTHOR

...view details