சென்னை:தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உணவுக் கூடங்களில் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உணவுகங்களில் பார்சல் மட்டும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மளிகை கடைகள், இறைச்சி, மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கடைகளிலும் பார்சல் கொடுப்பதற்கான பைகளின் பயன்பாடு அதிகரிந்துள்ளது. அந்த பைகளை எடுப்பதற்காக சிலர் எச்சில் தொட்டும், வாயால் ஊதியும் பிரித்து அதனுள் பொருள்களை போட்டுக் கொடுக்கின்றனர்.