விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படத்தில் இடம்பெற்ற ’சிங்கம் போல நடந்து வரான்’ என்ற பாடலை பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் பரவை முனியம்மா. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியதோடு, காதல் சடுகுடு, ஏய், தோரணை உள்ளிட்ட 25 திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.
பரவை முனியம்மா நலம் விசாரித்த அபி சரவணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக இவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து பரவை முனியம்மா நலமுடன் வீடு திரும்பினார். இலவச மருத்துவம் பார்த்த வேலம்மாள் மருத்துவ நிர்வாகத்திற்கும், அதற்காக மருத்துவமனையை தொடர்ப்பு கொண்டு உதவிய ஜசரி கணேஷுக்கும், நடிகர் அபி சரவணனுக்கும், நடிகர் சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பரவை முனியம்மாள் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: 'பரவை முனியம்மா' பற்றிய வதந்திகளுக்கு அபி சரவணன் முற்றுப்புள்ளி!