இது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில், சட்டப் பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் தமிழ்நாடு வந்திருந்த தலைமைத் தேர்தல் ஆணையர், நிர்வாக, பாதுகாப்பு ஏற்பாடுகளின் தேவை குறித்து கேட்டறிந்தார்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகை! - சத்யபிரதா சாகு
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு வருகின்றனர் என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பின்னர் கட்சிப் பிரதிநிதிகள், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு வருகின்றனர். மேலும் தேர்தல் நெருங்க இன்னும் அதிகப்படியான துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தேர்தல் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் - மாநகராட்சி ஆணையர்