தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூரியன் மீன ராசியில் சஞ்சரித்தல்.. 5 ராசிதாரர்கள் ஜாக்கிரதை! - Panguni matha Rasi palan 2023

சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கக்கூடிய பங்குனி மாதத்தில் மேஷம் முதல் மீனம் அனைத்து ராசிதாரர்களுக்குமான சிறப்பு பலன்கள் மற்றும் பரிகாரங்களை அறிந்துக்கொள்வோம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 15, 2023, 6:52 AM IST

சூரியன் மீன ராசிரியில் சஞ்சரிக்கும் ஒரு மாத காலம் பங்குனி மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மீன ராசியில் அதன் அதிபதியான குரு இருபத்தோடு புதன் பகவானும் இணைய உள்ளார். சூரிய பகவான் மார்ச் 15-ஆம் தேதி காலை 6.34 மணிக்கு மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மார்ச் 16-ஆம் தேதி புதன் பகவானும் மீன ராசியில் குரு மற்றும் சூரியனுடன் வந்து இணைய உள்ளார். புதாத்திய யோகம் உருவாக உள்ளது. இந்த காலத்தில் மேஷம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு பங்குனி மாதத்தில் சற்று தீங்கு விளைவிக்கக்கூடிய பலன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேஷம்: சூரியன் இப்போது மீன ராசிக்குள் நுழைகிறார். மீன ராசியில் சூரியன் நுழைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக செலவு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நேரத்தில், ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சூரியனுக்கு குங்குமம் கலந்த தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

ரிஷபம்:மீன ராசியில் சூரியன் நுழைவதால் இந்த ஒரு மாத காலமும் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் அல்லது வேலைக்கு திட்டமிடுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வேலை செய்பவர்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பீர்கள்.

பரிகாரம் - தினமும் காயத்ரி சாலீசாவை பாராயணம் செய்யுங்கள்.

மிதுனம்: மீன ராசியில் சூரியன் நுழைவது உங்களுக்கு நன்மை தரக்கூடியது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் தாயின் அன்பால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் செய்ய விரும்புவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சூரிய பகவானின் ஏதாவதொரு மந்திரத்தை உச்சரியுங்கள்.

கடகம்: மீனம் ராசியில் சூரியன் நுழைவதால் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு நன்மை தரும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு மதம் சார்ந்த பயணத்திற்கு செல்லலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். இப்போது உங்களுக்கு மாணவர்களின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: தந்தையின் ஆசியைப் பெற்று வேலையைத் தொடங்குங்கள்.

சிம்மம்:மீன ராசியில் சூரியன் நுழைவதால் சற்று கவலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மேலும், ஆணவத்தைத் தவிர்க்க வேண்டும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்: தினமும் சூரிய பகவானை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

கன்னி: இந்த ஒரு மாத காலம் உங்களுக்கும் உங்கள் தொழில் பார்ட்னருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு பதற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நேரத்தில், நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும்.

பரிகாரம்: தினமும் பசுக்களுக்கு வெல்லம் மற்றும் ரொட்டி கொடுங்கள்.

துலாம்: சூரியன் இப்போது மீன ராசிக்குள் நுழைகிறார், எனவே இந்த மாதம் உங்கள் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். ஒரு நோக்கத்திற்காக வேலை செய்பவர்கள் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக கோபப்படுவீர்கள். வங்கி அல்லது கடன் தொடர்பான வேலைகளை கவனிப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் சூரியனுக்கு குங்குமம் கலந்த தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

விருச்சிகம்: மீன ராசியில் சூரியன் நுழைவால் விருச்சிக ராசி மாணவர்களுக்கு நன்மை அதிகரிக்கும், ஆனால் காதலிப்பவர்களுக்கு கடினமான நேரமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் உங்களுக்கு ஏற்படலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:ஆதித்ய ஹிருதயம் ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள்.

தனுசு: சூரியன் மீன ராசியில் சஞ்சரிப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு மனக் கவலைகள் நீங்கும். உங்கள் வீட்டைப் புதுப்பிக்கவும் திட்டமிடுவீர்கள். உங்கள் பணம் சமூகப் பணிகளுக்காகச் செலவிடப்படலாம். நிலம் தொடர்பான பணிகளை கவனமாக செய்ய வேண்டும்.

பரிகாரம்: தினமும் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள்.

மகரம்: இந்த மாதம் உங்கள் வாழ்க்கையின் மீது உங்களுக்கே நம்பிக்கை பிறக்கும். இருப்பினும், உடன்பிறந்தவர்களுடன் உள்ள உங்கள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சில புதிய வேலைகளைச் செய்ய நீங்கள் ரிஸ்க் எடுக்கலாம். தந்தையின் உடல்நிலை குறித்த உங்கள் கவலை நீங்கும்.

பரிகாரம்: பசுக்களுக்கு தினமும் வெல்லம் கொடுங்கள்.

கும்பம்:இந்த மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதாரணமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஆனால் இந்த நேரம் ஆரோக்கியத்தின் அடிப்படையில் நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலையை புறக்கணித்தால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

பரிகாரம்: சூரிய பகவானின் பன்னிரண்டு புனித நாமங்களையும் தினமும் உச்சரியுங்கள்.

மீனம்: சூரியன் உங்கள் ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பதால். இந்த நேரத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், ஆனால் உங்களுக்கு ஈகோவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் பார்ட்னருக்கும் வாழ்க்கைத்துணைக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்:தினமும் ஒரு ஜெபமாலை அளவு (108 முறை) காயத்ரி மந்திரத்தை ஜெபியுங்கள்.

ABOUT THE AUTHOR

...view details