தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லண்டன் அரசு அருங்காட்சியகத்தில் இடம்பெறவுள்ள ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள்!

சென்னை : லண்டன் அரசு அருங்காட்சியகத்தில் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலைகள்  டிசம்பர் 4ஆம் தேதி நிறுவப்பட உள்ளது.

pandiyarajan minister function

By

Published : Nov 2, 2019, 12:00 AM IST

ஜெர்மனி நாட்டில் உள்ள பாடன் உர்ட்டன்பெர்க் மாநிலத்தில் ஸ்டுட்கார்ட் நகரத்திலுள்ள லண்டன் அரசு அருங்காட்சியகத்தில் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலைகள் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நிறுவப்பட உள்ளன. இதன் அறிமுக நிகழ்வு சென்னை தலைமை செயலகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 40 கிலோ எடை , மூன்று அடி நீளம் கொண்ட ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலையை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார். மேலும் 35 கிலோ எடை கொண்ட 1.5 அடி நீளம் கொண்ட மற்றொரு திருவள்ளுவர் சிலையும் லண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்படவுள்ளது.

திருவள்ளுவர் சிலையை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார்

தமிழ் மொழியின் சிறப்பினை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் மரபு அறக்கட்டளை என்னும் பன்னாட்டு அமைப்பு இந்த முயற்சியை செய்து வருவதாகவும், தமிழ்நாடு அரசு வழிச்செலவிற்காக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளராக நீதிபதிகள் நியமிக்கப்படுவார்களா?

ABOUT THE AUTHOR

...view details