நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 05.30 மணிக்கு நிறைவுற்றது. இதில் திரை நட்சத்திரப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்நிலையில், பாண்டவர் அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் நாசர் கூறியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மிகப்பெரிய ஜனநாயக கடமையான தேர்தல் மிக நல்லபடியாக முடிந்தது. பல தடைகள் இருந்தது, அதையெல்லாம் கடந்து இந்தத் தேர்தல் நடந்துள்ளது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால், ஏறக்குறைய 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏறக்குறைய 900தபால்வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தல் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் அந்த சூழலை உருவாக்கிவிட்டார்கள். உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி.
குளறுபடிகள் எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் எல்லோரையும் எப்போதும் நண்பர்களாக மதிக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலே உங்களுக்கு ஆதரவாகத்தான் முடிந்துள்ளது எனவும், நீதிபதி பத்மநாபன் உங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்தாவது: