தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் இன்று(நவ.05) நடைபெற்றது. அதில் திமுகவினர் ஊராட்சி குழுவிற்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் பாமகவினர் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு தற்போது எவ்வளவு நிதி உள்ளது எனவும் கேள்வி எழுப்பினர்.
ஊராட்சி குழுவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குளறுபடி! - panchayat committee meeting in darmapuri
தருமபுரி ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவரிடம், உறுப்பினர்கள் குழுவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குளறுபடி இருப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
panchayat committee meeting
அதற்கு அலுவலர்கள், ஒருவருக்கொருவர் ஒன்றரை கோடி ரூபாய் என்றும், இரண்டரை கோடி ரூபாய் என்றும் குளறுபடியாக பதிலளித்தனர். ஆனால், உறுப்பினர்கள் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் இதுவரை ஆறரை கோடி ரூபாய் என்று பதிவேற்றப்பட்டுள்ளது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:தருமபுரி மாவட்ட ஆட்சியராக கார்த்திகா பொறுப்பேற்பு!