பல்லாவரம் பகுதியில் ஒலிம்பியா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவு நீர் சாலையில் திறந்துவிட்டதால் அடுக்குமாடி அருகில் வசிக்கும் 200-க்கும் அதிகமான மக்கள் அடுக்குமாடி குடியிருப்பை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சமரசம் செய்த நிலையில் உடனடியாக அங்கு இருந்த கழிவுகளை அகற்ற உத்தரவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆறு மாதங்களாக இந்த சம்பவம் நடந்து வருகிறது, பல முறை புகார் அளித்தும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோல் முற்றுகை செய்தால் அந்த சமயத்தில் கழிவுகள் அகற்றப்படுவதும், சில தினங்களில் இதே நிலை தொடர்வதும் வாடிக்கையாக உள்ளது.