சென்னை அடுத்த பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசன், தனது கூட்டணி நிர்வாகிகளுடன், அனகாபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பல்லாவரம் தொகுதி முழுவதும் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பல்லாவரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்! - பல்லாவரம் செய்திகள்
பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசன், தேமுதிக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல்செய்தார்.
பல்லாவரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று தேர்தல் அலுவலர் லலிதாவிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவரின் வேட்புமனுவை அவரே முழுவதுமாகப் படித்து முடித்து, பின் தேர்தல் அலுவலர் லலிதாவிடம் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க:'ஐ எம் ஸாரி பிஎம்'- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு!