தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (மே 12) ஒரே நாளில் 30,355 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 14,68,864 ஆக உள்ளது. 293 பேர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
குறிப்பாக சென்னையில் மட்டும் 7,564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,12,505 ஆக அதிகரித்து உள்ளது.
பல்லாவரம் உதவி ஆணையர் கரோனாவால் உயிரிழப்பு பல்லாவரம் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த ஈஸ்வரன்(52) கரோனா தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 94 உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 24 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தங்கைக்கு பட்டுப்பாவாடை வாங்க சேமித்த பணம்- முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த சிறுமி!