சென்னை அருகே திருநின்றவூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வீடுகளில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. இதனால் அம்பத்தூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் திருநின்றவூர் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், திருநின்றவூர் அருகே கரளப்பாக்கம் பகுதியில் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். பின்னர், இது தொடர்பாக சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கொள்ளையன் விக்கி என்கிற பல்லு, அவரது கூட்டாளிகளான பெரம்பூரைச் சேர்ந்த லாரன்ஸ் மணி என்கிற சின்ன மணி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.