தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - Athikadavu - Avinashi Project

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான 'அத்திக்கடவு - அவிநாசி' திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

athikadavu

By

Published : Nov 15, 2019, 5:10 PM IST

தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கட்டடங்கள் மற்றும் நீர்வளத்துறையின் நிலை குறித்தான இந்த ஆய்வுக்கூட்டத்தில், நீர்வள ஆதாரம் தொடர்பான நூலை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நீர் மேலாண்மையை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதன்மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். குடிமராமத்துத் திட்டம் மக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பருவ மழையை சேமிக்கும் குடிமராமத்துத் திட்டம் மக்கள் இயக்கமாகவும் உருவெடுத்துள்ளது' எனக் கூறினார்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான 'அத்திக்கடவு - அவிநாசி' திட்டம், தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவே இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும் விவரித்தார்.

இதையும் படிங்க: வெளிநாடுகளுக்கு இணையாக மாறிய சென்னை பாண்டி பஜார்

ABOUT THE AUTHOR

...view details