மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருருப்பவர்களுக்கு நேர்காணல் இன்று (மார்ச் 1) அக்கட்சி தலைமை அலுவலகத்தில் காலை முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தேர்வு குழுவில் உள்ள பழ.கருப்பையா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுகதான் மோடியின் B டீம்; நாங்கள் அல்ல - பழ. கருப்பையா
சென்னை: திமுகதான் மோடியின் B டீம் என சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "காமராஜரை போன்ற மற்றொரு தலைவர் வேண்டும் என்று ராகுல் காந்தி சொல்லுகிறார். அவர் அதற்கு எப்படி ஸ்டாலினை தேர்ந்தெடுத்தார். காங்கிரஸ் ஆட்சி பறிபோனதற்கு 2ஜிதான் காரணம். மோடிக்கு B டீம் நீங்கள்தான். மோடி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் B டீம் திமுகதான் காரணம். இந்த சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி என்ற கொள்ளை கூட்டம் வரவேண்டுமா அல்லது ஸ்டாலின் என்ற கொள்ளை கூட்டம் வர வேண்டுமா என்ற போட்டி நடக்கிறது. இதில் பாஜகவிற்கு என்ன வேலை இருக்கிறது. திமுகதான் மோடியின் B டீம். நாங்கள் அல்ல" என்றார்.