சென்னை:வயது மூப்பு காரணமாகவும் தலைமுறை வழியாகவும், பார்க்கின்சன்ஸ் என்று அழைக்கப்படும் நடுக்குவாதம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குளோபல் ஆர்ட் இந்தியா அமைப்பின் சார்பில் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொடர் பயிற்சியின் மூலம் அவர்களே தங்கள் கையால் வரைந்த ஓவிய கண்காட்சி, சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது.
தொடர் சிகிச்சை பெற்று வந்த பார்க்கின்சன்ஸ் (நடுக்க வாதம்) நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ஓவிய பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தன்னம்பிக்கையுடன் வரைந்த ஓவியம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை பார்வையிட்டு துவக்கி வைத்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இது போன்று ஓவியங்கள் மற்ற நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் எனக் கூறினார்.