தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெயிண்ட் கடையில் ஐம்பதாயிரம் கொள்ளை - சிசிடிவி காட்சி

சென்னை: செங்குன்றம் அடுத்த ஆலமரம் பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் 50 ஆயிரம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி

By

Published : Nov 14, 2019, 10:11 AM IST

செங்குன்றம் அடுத்த காந்திநகர் ஆலமரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான கமலா ஏஜென்சிஸ் என்கிற பெயிண்ட் கடை உள்ளது. நேற்றிரவு வழக்கம்போல் கடையை பூட்டிbகாண்டு சென்ற கிருஷ்ணன் இன்று காலை கடையை திறந்தபோது கல்லாவில் இருந்த 50 ரூபாய் பணம் கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் கொள்ளையன் கடையின் மேற்கூரை வழியாக வந்து சிசிடிவி கேமராக்களை திசைதிருப்பி கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த பின்னர் சிசிடிவி கேமராவை முன்பு இருந்ததுபோல் திருப்பி வைத்து சென்றதும் பதிவாகி இருந்தது.

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சிகளில் பதிவான கொள்ளையன் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details