சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்த மாநகராட்சி பேருந்தில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கையில் பட்டா கத்தியுடன் இருந்த ஒரு மாணவர் மற்றொரு மாணவரான வசந்த் என்பவரை சாலையில் விரட்டி விரட்டி வெட்டினார்.
ஆக்ரோசமாக வெட்டிக் கொண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - Pachayappa college
சென்னை: அரும்பாக்கம் சிக்னல் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்திகளைக் கொண்டு தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
students fight
இதில் அந்த மாணவர் காயமடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த மாணவர் உட்பட இருவர் பேருந்தில் இருந்த மற்ற மாணவர்களையும் வெட்டினர். இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். வெட்டப்பட்ட மாணவர் வசந்த்தை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் ரூட் பிர்சனையால் எழுந்தது என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.