சென்னை ஐசிஎப் பகுதியில் 47f பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஏறியுள்ளனர். அதன்பின் அவர்கள் பேருந்தில் சத்தமாக பாட்டு பாடிக்கொண்டும் தாளம் போட்டுக்கொண்டும் சகபயணிகளை தொந்தரவு செய்துகொண்டும் பயணித்துள்ளனர்.
அப்பேருந்து நியூ ஆவடி சாலை வழியாக செல்லும்பொழுது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பேருந்தில் அதிக சத்தம் வந்ததால் அதனை நிறுத்தி பார்க்கையில் மாணவர்கள் மாட்டிக்கொண்டனர்.
பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்ததின் பேரில் அவர்கள் ஏழு பேரையும் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரித்ததில் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த சரத்குமார், மோகன பிரியன், சிவநேசன், பிரசாந்த், சதீஷ்குமார், சதீஷ், பிரேம் ஆனந்த் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது 107crpc பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துணை ஆணையாளர் முன்பு உறுதி மொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பினர்.