தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சாதிய மதவாதத்திற்கு எதிரான வெற்றி’ - திருமாவை வாழ்த்திய பா. ரஞ்சித் - இயக்குநர் பா.ரஞ்சித்

தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கும் விசிகவிற்கும், அதன் தலைவருக்கும் வாழ்த்துகள் என இயக்குநர் பா. ரஞ்சித் தனது மகிழ்வை பகிர்ந்துள்ளார்.

திருமாவை வாழ்த்திய பா.ரஞ்சித்
திருமாவை வாழ்த்திய பா.ரஞ்சித்

By

Published : May 2, 2021, 11:02 PM IST

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் பல இடங்களில் முன்னிலை பெற்ற திமுக, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். அண்ணா, கருணாநிதியைத் தொடர்ந்து, திமுக சார்பில் ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகிறார்.

அதேபோல், திமுக கூட்டணி கட்சிகளும் அதிகமான இடங்களில் வெற்றிகளைப் பதிவு செய்துவருகின்றன. தனிச்சின்னத்தில் ஆறஉ தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, கணிசமான வாக்குகளுடன் நான்கு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், விசிக வேட்பாளர்களையும், தொண்டர்களையும் வழி நடத்திய அக்கட்சி தலைவரை இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சாதிய மதவாதத்திற்கு எதிராக வெளிப்படையாகத் தன்னையும், தன்னை சார்ந்த தொண்டர்களையும் வழி நடத்தி, பிடிவாதமாகத் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தனித் தொகுதியில் மட்டும் இல்லாமல் இரண்டு பொதுத்தொகுதிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கும் விசிக & அதன் தலைவர் திருமாவளவனுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details