தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கவேலு தெரு வீடுகள் இடிப்பு வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயல்- பா. ரஞ்சித்

சென்னை: தங்கவேலு தெருவில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் தமிழ்நாடு அரசின் செயல் கொடுமையானது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித்
பா. ரஞ்சித்

By

Published : Jan 3, 2021, 6:16 PM IST

சென்னை நகரை அழகுப்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் கூவம் அடையாறு கரையோர மக்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.

வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ளது தங்கவேலு தெரு. வித்யோதயா பள்ளி எதிரில் உள்ள இந்த தெருவில் 77 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது இவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி செய்து வருகிறது.

இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள இயக்குநர் பா. ரஞ்சித், "தமிழக மக்களே சந்தோஷமாக வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயல் கொடுமையானது. தமிழ்நாடு அரசு, மக்கள் சந்திக்கும் பிரச்னையில் கவனம் செலுத்தாமலிருப்பது ஏன்?தற்பொழுது #தங்கவேலுதெரு மக்களின் வாழ்விற்கு நீதி வழங்கிடு" என்று கோரியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பதிவிட்டுள்ள ட்விட்டில், "படிக்கும் குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ளமுடியாத அரசை வன்மையாக கண்டிப்போம்!

தலைமுறைகளாய் வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களை அகற்றும் தமிழ்நாடு அரசே மனிதநேயத்தை காட்டுங்கள், எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளியுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக சர்ச்சையை ஏற்படுத்துகிறது- ப.சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details