'ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அரசு பொய் கூறுகிறது' - ப.சிதம்பரம்
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அரசு நாள்தோறும் பொய் கூறுகிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
P Chidambaram tweet
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அரசு நாள்தோறும் பொய் கூறி வருகிறது. உண்மையில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உறவினர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் ஆக்சிஜன் தேடி அலைகின்றனர். இந்த மாதிரியான கதை என்னிடமும், என் நண்பர்களிடமும் ஏராளமாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.