தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ப. சிதம்பரத்துக்கு பிப். 7ஆம் தேதி வரை கால அவகாசம்! - P Chidambaram election case

சென்னை: 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றிபெற்றதை எதிர்த்த வழக்கின் குறுக்கு விசாரணைக்கு ஆஜராக பிப்ரவரி ஏழாம் தேதி வரை அவருக்கு அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

p chidambaram election case deadline for him till 7th february
p chidambaram election case deadline for him till 7th february

By

Published : Dec 9, 2019, 8:04 PM IST

2009ஆம் ஆண்டு நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட 3354 வாக்குகள் அதிகம் பெற்று ப. சிதம்பரம் வெற்றிபெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து ராஜ கண்ணப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தால் குறுக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குறுக்கு விசாரணைக்கு ஆஜராக மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி குறுக்கு விசாரணைக்கு ஆஜராக பிப்ரவரி ஏழாம் தேதி வரை சிதம்பரத்திற்கு அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'வீழ்வேனென்று நினைத்தாயோ, ஒரு நாளும் நாங்கள் வீழமாட்டோம்' - சிதம்பரம் சூளுரை

ABOUT THE AUTHOR

...view details