தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
ஆக்சிஜன் தட்டுப்பாடு

By

Published : Apr 22, 2021, 1:39 AM IST

சென்னை குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை உள்ளது. புறநகர் பகுதிகளில் உள்ள நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

இதனால் 8க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே ஆம்புலன்ஸ்க்கும் தட்டுப்பாடு உள்ளதால் நோயாளிகள் மருத்துவமனையிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: 'மக்கள் உயிரை எப்படி காக்கப்போகிறார் என பிரதமர் பதிலளிக்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details