தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்ஸிஜன் தேவைக்கு 104 என்ற எண்ணை அழையுங்கள்- தமிழ்நாடு அரசு தகவல் - ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண்

Oxygen requirement can be contacted on 104
Oxygen requirement can be contacted on 104

By

Published : Apr 24, 2021, 3:26 PM IST

Updated : Apr 24, 2021, 5:53 PM IST

15:21 April 24

தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தேவைக்கு 104 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக, 104 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கரோனா சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநிலத்திலுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய தேவைப்படும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 

அத்தகைய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Apr 24, 2021, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details