தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாட்டிற்கு 2188.96 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டெலிவரி - oxygen cylinders

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாட்டிற்கு இதுவரை 2188.96 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தடைந்துள்ளது.

oxygen cylinders
oxygen cylinders

By

Published : Jun 2, 2021, 7:17 AM IST

கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் ரயில்வே துறை சார்பாக நாடு முழுவதும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுவருகிறது. தென்னக ரயில்வே சார்பாக, இதுவரை தமிழ்நாட்டிற்கு 35 ஆக்சிஜன் சிறப்பு விரைவு ரயில்கள் மூலமாக 2188.96 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூன் 1) தமிழ்நாட்டிற்கு இரண்டு ஆக்சிஜன் ரயில்கள் வந்தன.

சென்னை துறைமுகத்திற்கு, ஒடிசா மாநிலத்திலிருந்து நான்கு டேங்கர்களில் சிறப்பு ரயில் மூலமாக சுமார் 83.28 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வந்தடைந்தது. அதைப் போலவே, ரூர்கேலாவிலிருந்து சிறப்பு ரயில் மூலம் மதுரை கூடல்நகருக்கு 90.64 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் ஆறு டேங்கர்களில் வந்துள்ளது.

இதுவரை, தண்டையார்பேட்டை கண்டெய்னர் முனையத்துக்கு, 22 ரயில்கள் மூலம் 1,432 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தண்டையார்பேட்டை கூட்ஸ் முனையம், திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையத்திற்கு தலா ஒரு ரயில் ஆக்சிஜனுடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஒரு ஆக்சிஜன் ரயில் மிலவட்டான், வாடிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தற்போது கூடல் நகரில் மூன்று பெட்டிகளில் ஆக்சிஜன் கொண்டுசெல்லப்பட்டு இருக்கிறது. சென்னை துறைமுகத்தில் இரண்டு பெட்டிகளில் ஆக்சிஜன் கொண்டுசெல்லப்பட்டு இருக்கிறது. இதில் 145.36 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் எடுத்துவரப்பட்டு இருக்கிறது.

இவை தவிர, தமிழ்நாட்டிற்கு நான்கு கண்டெய்னர்களில் 84.15 மெட்ரிக் மருத்துவ ஆக்சிஜன் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல தென்னக ரயில்வே சார்பில் கேரள மாநிலத்திற்கு மூன்று ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் 380.2 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details