தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் கரோனா நோயாளிகளுக்குத் வழங்கப்படும் ஆக்ஸிஜனின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ஸிஜனை சேகரித்து வருகிறது. மத்திய அரசும் ஆக்ஸிஜன் அனுப்பி உதவி வருகிறது.
இச்சூழலில், இந்தியத் தொழில் கூட்டமைப்பு பௌண்சிங் போர்டு சார்பாக 1000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதற்கட்டமாக 750 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாகனங்கள் மூலம் அனுப்பிவைத்தார்.