நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள 'அசுரகுரு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு, நாயகி மகிமா நம்பியார், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த இயக்குநர் பாக்யராஜ்! - சர்ச்சை கருத்து
சென்னை: "அரசியலில் ஒரே இரவில் வாரிசுகள் முன்னுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் சினிமாவில் அப்படியில்லை" என்று, திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
3771753
இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், "சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை. ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள்" என்றார்.
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து மறைமுகமாக விமர்சித்த பாக்யராஜின் பேச்சு, சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Jul 7, 2019, 5:25 PM IST