சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களைத் தனிமைப்படுத்தி, அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னையில்தான் கரோனா பாதிப்பு அதிகம் இருந்துவருகிறது.
அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளான அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. இதில் அதிகபட்சமாக அண்ணா நகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதேபோல் கோடம்பாக்கத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து மூன்றாயிரத்து 685ஆக இருக்கிறது. கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 962ஆக அதிகரித்துள்ளது.
தற்போது ஆறாயிரத்து 17 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்தத் தொற்றால் இதுவரை மூன்றாயிரத்து 706 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் பட்டியலை இன்று (நவ. 07) சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு :
அண்ணா நகர் - 22 ஆயிரத்து 167,
கோடம்பாக்கம் - 21 ஆயிரத்து 853,
ராயபுரம் - 18 ஆயிரத்து027,