தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடந்த 15 நாள்களில் 1,13,117 பேர் கைதுசெய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு! - Over the past 15 days, 1,13,117 people have been arrested for violating on curfew

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 நாள்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 பேரை காவல் துறையினர் கைது செய்து ஜாமினில் விடுவித்துள்ளனர்.

police
police

By

Published : Apr 8, 2020, 5:08 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடையை மீறி வெளியே வரும் நபர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 15 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 833 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 87,577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறியுள்ளது. இதையும் படிங்க:கல்லூரி மாணவர் கொலை: திமுக கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details