சென்னை:ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று குட்கா விற்பனை தொடர்பான சோதனை நடைபெற்றது. அதில், 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 23 கடைகள் சீல் வைக்கப்பட்டு, 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பா? 26 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி கமிஷனர் உத்தரவு!
Gutka saleas issue: குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
26 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Published : Nov 22, 2023, 10:08 AM IST
இதன் தொடர்ச்சியாக, குட்கா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்ட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் குட்கா விற்பனை செய்பவர்கள், அதற்கு துணை புரியும் காவலர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.