சென்னை திருவேற்காட்டில் இந்திய அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300 பள்ளிகளிலிருந்து 1200 மாணவ,மாணவியர் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போட்டிகள் ஜூனியர், சப் ஜூனியர்,சீனியர் பிரிவுகளில் நடைபெற்று வருகின்றது. இதில், பங்கேற்று போட்டியிடும் வில்வித்தை வீரர்களின் திறமையை பார்வையாளர்கள் வெகுவாக வியந்து பாராட்டினர். வெற்றிபெற்ற வீரர்களுக்கு விழா ஏற்பட்டாளர்கள் பரிசுகளை வழங்கி கெளரவித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டிகளில் பங்கெடுத்து தங்களது தனித் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதன் மூலம் இவர்கள் வரும் காலங்களில் தேசிய அளவிலான போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது என்றார்.