தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்டிஈ சட்டம்: தனியார் பள்ளியில் சேர ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்! - தமிழகம்

சென்னை: தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை

By

Published : May 20, 2019, 4:43 PM IST

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2019-20 கல்வியாண்டில் பள்ளிகளில் சேர ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 989 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

காஞ்சிபுரம் 5,791, திருவள்ளுர் 5,994, கடலூர் 5,272, விழுப்புரம் 6,814,வேலூர் 8,776, திருவண்ணாமலை 5,234, சேலம் 7,153,நாமக்கல் 2,434, தருமபுரி 4,560, ஈரோடு 2,316, கோவை 3,966, நீலகிரி 465, தஞ்சாவூர் 2,311, திருச்சி 4,107, கரூர் 1,321, பெரம்பலூர் 1,100, புதுக்கோட்டை 2,748, மதுரை 7,625, தேனி 2,144, திண்டுக்கல் 3,144, ராமநாதபுரம் 1,974, விருதுநகர் 2,340, சிவகங்கை 2,424, திருநெல்வேலி 4,599, தூத்துக்குடி 2,518, கன்னியாகுமரி 1804, சென்னை 7,068, கிருஷ்ணகிரி 3,047, அரியலூர் 1,169, திருப்பூர் 3,513 என ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 989 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அலுவலர் ஒருவர்," விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையின்படி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் பள்ளியின் தகவல் பலகையில் இந்த மாதம் இறுதியில் ஒட்டப்படும். அந்த மாணவர்கள் மட்டும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்", என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details